Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே: “இருதரப்பு மோதல்”…. மாறி மாறி நடந்த “துப்பாக்கி சூடு”…. பதறிய பிரபல நாடு….!!

சிரியாவில் நடந்த மிகக்கடுமையான இருதரப்பு துப்பாக்கி சண்டையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் உட்பட 100க்கும் மேலானர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சிரியாவிலுள்ள ஹசாகா நகரில் அமைந்துள்ள குர்ஷித் இன போராளிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் சிறைச்சாலை ஒன்றின் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்கள்.

இந்த தாக்குதலை பயன்படுத்தி தங்களது இயக்கத்தின் தலைவர் உட்பட பலரையும் விடுவிக்க நினைத்துள்ளார்கள். ஆனால் சிறையை பாதுகாத்து வந்த குர்ஷித் இன போராளிகள் தாக்குதலை பயன்படுத்தி அதற்குள் நுழைய முயன்ற ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மீது அதி பயங்கரமாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள்.

அப்போது ஐ.எஸ் பயங்கரவாதிகள் குர்ஷித் கிளர்ச்சியாளர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள். இவ்வாறு நடந்த இரு தரப்பு துப்பாக்கி சூட்டினால் சுமார் 100 க்கும் மேலானோர் உயிரிழந்துள்ளார்கள்.

Categories

Tech |