தமிழ் சினிமாவில் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படம் கடந்த 2009-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க, ஹரி வைரவன், சூரி, சரண்யா மோகன், விஜய் சேதுபதி, பரோட்டா முரளி, அப்புகுட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்த ஹரி வைரவன் குள்ளநரி கூட்டம் மற்றும் நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக அவருடைய மனைவி கவிதா தனியார் youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அதாவது சர்க்கரை வியாதி, இதய நோய் மற்றும் இரண்டு கிட்னி செயலிழப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் ஹரி வைரவன் பாதிக்கப்பட்டு இன்று நடக்கக்கூட முடியாத ஒரு நிலையில் இருக்கிறார். இவரின் ஒவ்வொரு பொழுதும் மனைவியின் உதவியுடன் தான் கழிகிறது. அதோடு ஹரி வைரவன் இன்னும் 6 மாதங்களுக்கு மட்டும்தான் உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஹரி வைரவன் மீண்டும் குணமடைந்து வரவேண்டும் என்று கூறுகின்றனர்.