Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. உக்ரைன்- ரஷ்யா போர் சூழலில் புதிதாக கிளம்பியுள்ள…. இன்னுமொரு தாக்குதல்….!!!

அமெரிக்கா, வடகொரியா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனையான ‘கண்டம் விட்டு கண்டம் பாயும்’ சோதனையால் உலக அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதன் காரணமாக அமெரிக்கா, அந்நாட்டின் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு வலியுறுத்தி உள்ளது. ஆனால் அதேசமயம் சீனா மற்றும் ரஷ்யா நாடுகள் இந்த நடவடிக்கைகளில் எந்த ஒரு ஆர்வமும் காட்டவில்லை.

இதையடுத்து இது குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாவது, வடகொரியா, பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் மேலும் அந்நாட்டின் மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க பிரிட்டன் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து அல்பேனியா, பிரான்ஸ், அயர்லாந்து, நார்வே மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் அமெரிக்காவுடன் சேர்ந்து ஓர் அணியாக இணைந்துள்ளன.

மேலும் இதுகுறித்து ரஷ்ய துணை தூதர் அன்னா எவ்ஸ்டிக்னீவா கூறியுள்ளதாவது, ‘புதிய கூடுதல் தடைகள் வடகொரியா குடிமக்களால், ஏற்றுக்கொள்ள முடியாத சமூக பொருளாதார மற்றும் மனிதாபிமான பிரச்சனைகளால் அச்சுறுத்தும் என்று கூறியுள்ளார். இதையடுத்து கானா தூதர் ஹரோல்ட் அட்லாய் அக்யெமன் கூறியுள்ளதாவது, தற்போது நடந்துவரும் உக்ரைன்-ரஷ்யா போர் சூழலில், இந்த மாதிரியான பல தாக்குதல்களை உலகம் தாங்கிக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் சீன தூதர் ஒருவர் கூறுகையில், ‘நிலைமையை உறுதிப்படுத்தவும், பரஸ்பர நம்பிக்கை உருவாக்கவும், உரையாடலை மீண்டும் தொடங்கவும் அமெரிக்கா கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவ்வாறு பல கவுன்சில் உறுப்பினர்கள் ஏவுகணை சோதனைகளை நிறுத்துமாறு வடகொரியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |