சீனாவிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49.15 கோடியை தாண்டியுள்ளது.
சீனாவிலிருந்து கடந்த 2019ஆம் ஆண்டு பரவிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசியினை மிகத்தீவிரமாக செலுத்தி வருகிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,15,64,095 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு இருக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதுமாக 61,75,782 பேராக உள்ளது.