Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி வெடித்து 2 பேர் படுகாயம்…. எங்கு தெரியுமா….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பிரபல நாட்டில் ஏற்பட்ட  விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஜெர்மனி நாட்டில் உள்ள மத்திய சதுக்கம் பகுதிகள் ரேடிசன் புளூ என்ற ஓட்டல்  அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு  உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டியில் பல  மீன்கள் மக்களின் பார்வைக்காக வளர்க்கப்பட்டு வந்தது. மேலும் இங்கு   வருபவர்கள் தொட்டியின் கண்ணாடி பகுதி வழியே  உள்ளே நீந்தி சென்று கடல்வாழ் மீன் இனங்களை பார்வையிடலாம். இந்நிலையில் இன்று திடீரென அந்த தொட்டி வெடித்து சிதறியுள்ளது. இதில் 2 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் ஓட்டலில் இருந்த 300  பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அங்கு தங்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாண்டிரா வீசர் கூறியதாவது, “அந்த தொட்டியில் இருந்த தண்ணீர் வெளியேறி மீன்களும் தெருக்களில்  விழுந்துள்ளது. இதில் ஏராளமான மீன்கள் உயிரிழந்தது  என கூறியுள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |