ஜனவரி மாத இறுதிக்குள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு கெடு விதித்துள்ளது. எனவே தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாஜக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட ஆலோசனை மேற்கொண்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பாஜகவுக்கு தற்போது தமிழகம் முழுவதும் மக்களிடம் ஆதரவு பெருகி வருவதால் அந்த கட்சியினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வமுடன் விருப்பம் மனு வழங்கியுள்ளனர்.
அதில் பலரும் தாங்கள் தனித்து போட்டியிடவே விரும்புவதாக கூறியுள்ளனர். எனவே பாஜக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட போகிறதா ? அல்லது கூட்டணியா ? என்பது விரைவில் அறிவிக்கப்படும் என தமிழக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தமிழக அரசியலில் திமுக Vs அதிமுக என்ற அரை நூற்றாண்டு அரசியலை அக்கட்சியினர் திமுக Vs பாஜக என மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.