Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே…! எலியை அடித்தபோது…. உயிரே போன பரிதாபம்…. பெரும் அதிர்ச்சி…..!!!!!

சென்னை பொழிச்சலூர், மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் லட்சுமி(35). இவர் தனது வீட்டில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வரும் அட்டகாச எலியை பிடிக்க முற்பட்டுள்ளார். தனது 12 வயது மகனோடு சேர்ந்து எலியை அடித்து கொல்ல வேண்டும் என எண்ணி அடிக்க முற்பட்ட அவர் எதிர்பாராத விதமாக மயங்கி கீழே விழுந்தார்.

இதில் நெற்றியில் அடிப்பட்டு ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரது மகன் நடந்ததை தந்தையிடம் கூறி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |