ஹைதராபாத்திலிருக்கும் ஐஸ்வர்யாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஓரகத்தி கீதாஞ்சலி அவருக்கு முதல் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காதல் பாடல் வீடியோவை எடுப்பதற்காக ஹைதராபாத்தில் தங்கியிருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு திடீரென கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படத்தை ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட தனுஷின் அண்ணனான செல்வராகவனின் மனைவி ஓரகத்தி கீதாஞ்சலி என்பவர் தான் அவருக்கு முதன்முதலாக ஆறுதல் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதாவது Get Well Soon Love என்று ஐஸ்வர்யாவிற்கு ஓரகத்தி கீதாஞ்சலி ஆறுதல் அளிக்குமாறு மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார்.