புதுக்கோட்டை அருகே கீரனூரில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆட்டோவில் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்கள். அப்போது அவர்களை திருடர்கள் என நினைத்து ஊரே சேர்ந்த கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பத்து வயது பெண் குழந்தை படுகாயம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீரனூர் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் ஆட்டோவில் வந்தவர்களை தவறாக சந்தேகம் அடைந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.