பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாஜக கடந்த 15-ஆம் தேதி அன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 107 வேட்பாளர்களை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து இன்று பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் 85 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் எம்எல்ஏ ஸ்வாதி சிங்கும் அவருடைய கணவர் தயாசங்கர் சிங்கும் சரோஜினி நகர் தொகுதியில் போட்டியிட ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் பாஜக யார் சரோஜினி நகர் தொகுதியில் போட்டியிட போகிறார் ? என்பது குறித்து முடிவெடுக்கவில்லை. இதற்கிடையே ஸ்வாதி சிங் கணவர் போட்டியிடுவதில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன் என்று கூறிவிட்டார். எனவே கணவன்-மனைவி இருவரும் ஒரே தொகுதியில் சீட்டு கேட்பதால் பாஜக தற்போது திணறி வருகிறது.