பிரித்தானியாவில் ஒரே நாளில் ஒருவருக்கு 42,810.20 பவுண்டுகள் மின்கட்டணமாக பதிவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவில் வசித்து வரும் ஒரு குழந்தைக்கு தாயாரான 25 வயது chloee miles prior என்பவர் காலையில் கண்விழித்து தற்செயலாக தனது SSE smart meter ஐ கவனித்துள்ளார். அதில் 42,810.20 பவுண்டுகள் என மின்கட்டணம் பதிவாகி இருக்கிறது. பொதுவாக ஒரு நாளைக்கு அவரது மின் பயன்பாடு 1.80 பவுண்டுகள் என்ற கணக்கிலேயே இருக்கும் ஆனால் திடீரென பெருந்தொகை மீட்டரில் பதிவானதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலானது என அவர் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தான் மேற்கு சசெக்ஸ் நெட்வொர்த் பகுதியில் இவர் வசித்து வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு மிகவும் கவனமாகவே மின்சாரம் பயன்படுத்தியுள்ளார். இதனால் மாதம் ஒன்றிற்கு பொதுவாக 46 பவுண்டுகள் மின் கட்டணமாகவும், எரிவாயு பயன்பாட்டிற்காக 11 பவுண்டுகளும் செலுத்தி வந்துள்ளார். இந்த சூழலில் அதிகமான தொகை கட்டணமாக பதிவாகியுள்ளது. இதனை அடுத்து அவர் இணையத்தில் ஏதேனும் காரணம் பதிவாகி இருக்கிறதா என தேடி உள்ளார் இருப்பினும் அவருக்கு அதற்கான விடை கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.