தென் கொரியாவின் இச்சியொன் நகரில் இருந்து 173 பயணிகளுடன் விமானம் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து மெச்சன் நகருக்கு பயணம் மேற்கொண்டது. அப்போது விமானம் நேற்று இரவு பிலிப்பைன்ஸ் மெச்சன் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சி செய்தது ஆனால் அங்கு கன மழை பெய்து கொண்டிருந்ததால் இரண்டு முறை விமானத்தை தரை இறக்க நடத்திய முயற்சி தோல்வியடைந்துள்ளது. இந்த சூழலில் மூன்றாவது முறையாக விமானத்தை விமானி தரையிறக்க முயற்சி செய்துள்ளார். அப்போது கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கியதால் விமானம் ஓடுதளம் வலுவலுப்புடன் இருந்துள்ளது.
இதனால் விமானி தரையிறக்க முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி அருகில் இருந்த புல் வெளி மீது பாய்ந்துள்ளது. இதில் விமானத்தின் முன் பகுதி சேதம் அடைந்துள்ளது இதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் உட்பட 173 பேரும் அவசர கால வழி வழியாக விமானத்திலிருந்து குதித்து தப்பித்து சென்றுள்ளனர். ஆனால் இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து புல்வெளியில் பாய்ந்த விமானத்தை மீட்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓடுதளம் சரி செய்யப்பட்ட பின் விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.