Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… ஓடும் காரில் குழந்தை பெற்றெடுத்த பெண்…? அதிரடி அபராதம் விதித்த வாடகை கார் நிறுவனம்…!!!!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த 26 வயது பெண் பாரா காகனிண்டின் என்பவர் வசித்து வருகிறார். ஏற்கனவே ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு தாயான இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று பாரா வழக்கமான பரிசோதனைக்காக வாடகை காரில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது கார் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதால் பாராவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பாரா காரிலேயே அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

அதன் பின் கார் மருத்துவமனை சென்றடைந்ததும் அங்கு தயாராக இருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தாயையும் சேயையும் மீட்டு சிகிச்சை அளித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் நலமாக இருக்கின்றனர். இதற்கிடையே வாடகை காரில் குழந்தை பெற்றெடுத்த போது காரில் ஏற்பட்ட அசுத்தத்தை காரணமாக வைத்து பாராவுக்கு வாடகை கார் நிறுவனம் அபராதம் விதித்துள்ளது. மேலும் காரில் ஏற்பட்ட அசுத்தத்தை சுத்தம் செய்வதற்காக 60 பவுன் செலுத்த வேண்டும் என அந்த கார் நிறுவனம் பாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Categories

Tech |