Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே… “கடலில் குளித்த 4 பேர் அலையில் சிக்கி மாயம்”…? மீட்பு பணிகள் தீவிரம்…!!!!!!

திருவெற்றியூர் கடற்கரையில் மாயமான நான்கு பேரை தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மணலி அருகே அமைந்துள்ள ஆண்டார்குப்பம் பகுதியில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் உள்ளே இரும்பு தகடால் கூடாரம் அமைக்கும் பணியை தனியார் நிறுவனர் ஒருவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இந்த நிறுவன ஒப்பந்ததாரரிடம்  வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற காரணத்தினால் திருவொற்றியூர் ராமகிருஷ்ண நகரில் கடற்கரையை சுற்றிப் பார்க்க வந்தனர்.

அப்போது அவர்களில் 8 பேர் மட்டும் கடலில் இறங்கி குளித்தனர். மற்றவர்கள் எல்லாம் கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடலில் வந்த ராட்சத அலை 8 பேரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. இதில் 4 பேர் கரை சேர்ந்தனர். மீதமுள்ள 4 பேர் அலையில் சிக்கி மாயமானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடலில் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு வரை தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |