Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!… கடிதம் எழுதி வைத்து விட்டு வாலிபர் தற்கொலை….போலீஸ் தீவிர விசாரணை….!!

கடிதம் எழுதி வைத்து விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கட்டாநகரம் கிராமத்தில்  முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர்  காரைக்காலில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து  விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென அதே பகுதியில் அமைந்துள்ள வாய்க்கால் அருகே என் சாவிற்கு யாரும் கரணம் இல்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விஜய்யின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜய் எழுதிய கடிதத்தை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |