கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிந்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் இணையத்தில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தனுஷின் மீது ரஜினி ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
இதனால் தனுஷ் ரசிகர்கள் இடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது ரஜினி ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து பதிவிடுவதாக நினைத்து தனுஷை விமர்சனம் செய்து வருகின்றனர். இதனை ஏற்றுக்கொள்ளாத தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் we are with you dhanush என்ற ஹேஸ்டேக்-ஐ டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் பதிலுக்கு thalaiva என்ற ஹேஷ்டேக்-ஐ பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் தனுஷ் ரசிகர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே கடுமையான மோதல் நடந்து வருகிறது.