மோட்டார் சைக்கிள் மீது கடலோர படை பேருந்து மோதிய விபத்தில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள காமராஜ் சாலையில் கடற்படை அதிகாரியான சிவா என்பவர் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி லலிதாவை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கடலோர படை பேருந்து சிவாவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த லலிதாவின் தலையின் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த லலிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் லலிதா நிறைமாத கர்ப்பிணி என்பதால் குழந்தையையாவது காப்பாற்றுவதற்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தையும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பேருந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.