Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! கருணையே இல்லையா….? உதவிக்காக போராடும் போண்டாமணியிடம் 1 லட்சம் ஆபேஸ்…. பெரும் அதிர்ச்சி….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையை பூர்விகமாக கொண்டவர். போண்டாமணி சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டங்கள் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலு நகைச்சுவை பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்கள் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ரன், சுந்தரம் ட்ராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தரம் ட்ராவல்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவு ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாக உள்ளது. இதற்கிடையில் போண்டாமணி 2 சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. மாற்று சிறுநீரகம் பொருத்தும் வரையில் அவருக்கு சிகிச்சை அளிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நடிகர் பார்த்திபன், வடிவேலு, தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் உதவி செய்தனர். மருத்துமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த போண்டாமணி கடந்த 27ஆம் தேதி வீடு திரும்பினார்.

இதற்கிடையில் மருத்துவமனையில் உதவி செய்வது போல் நடித்து ராஜேஷ் என்ற பிரித்தீவி என்பவர் போண்டாமணி உடன் பழக்கத்தில் இருந்துள்ளார். அவருக்கு உதவியாக கடைகளுக்கு செல்வது போன்ற உதவிகளை செய்து வந்துள்ளார். இதனை நம்பி அவருடைய மனைவி மாதவி மருந்து வாங்கி தர அவருடைய ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்பி உள்ளார். மருந்து வாங்கி தருவதாக சென்ற ராஜேஷ் ஏடிஎம் கார்டிலிருந்து நகை கடையிலிருந்து ஒரு லட்சத்திற்கு நகை வாங்கியதாக மாதவி செல்போனிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து தான் ஏமாந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போண்டாமையின் மனைவி மாதவி இது குறித்து போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜேஷ் தேடி வந்தனர். இந்நிலையில் ராஜேஷ் விழுப்புரம் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் கைது செய்த ராஜேஷ் இடமிருந்து பணம் ஏதும் மீட்டப்பட்டதாக தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை மட்டுமே நடைபெற்று வருகிறது. உடல் நலக்குறைவு பாதிக்கப்பட்டுள்ள போண்டாமணியிடம் கருணை இல்லாமல் அவரை ஏமாற்றி இருப்பதை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |