‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பிரியங்கா மோகன் பற்றி பேசியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், திவ்யா, வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படமானது வரும் 10ம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் நடிகர் சூர்யா பேசியதாவது, “எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது பிரியங்கா மோகன் என்னிடம் வந்து ‘காக்க காக்க’ படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் நான் உங்களுடைய மிகப்பெரிய ஃபேன் என்றும் கூறினார். அப்போது நான் தனியாக சென்று பிரியங்காவிடம் ‘காக்க காக்க’ படம் வெளிவந்த போது உனக்கு வயது என்ன இருக்கும் என கேட்டேன்? அப்போது பிரியங்கா மூன்றாம் வகுப்பு படித்து கொண்டு இருந்ததாக கூறினார். இதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்” என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ‘காக்க காக்க’ படத்தின் போது மூன்றாவது படித்துக் கொண்டிருந்த சிறுமி தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து உள்ளாரா என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.