பெண்ணிற்கு மொட்டை அடித்து விட்ட குடும்பத்தினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பாலபள்ளி கிராமத்தில் மாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த அட்சிதா என்ற பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து இருவரும் வேறு பகுதியில் தனி வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் அச்சிதாவின் பெற்றோர் தங்களது மகள் தங்களுக்கு பிடிக்காத நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அச்சிதாவின் பெற்றோர் தனது உறவினர்களுடன் தனது மகள் வசித்து வந்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அங்கிருந்த அவர்கள் 2 பேரையும் கடுமையாக மிரட்டியதோடு அச்சிதாவை மட்டும் காரில் ஏற்றி தங்களது வீட்டிற்கு அழைத்துச் வந்துள்ளனர். இதனையடுத்து வீட்டில் வைத்து அச்சிதாவுக்கு தூக்க மாத்திரைகளை பாலில் கலந்து கொடுத்துள்ளனர். அதன் பின்னர் தனது மகளை அலங்கோலப்படுத்த வேண்டும் என நினைத்து அவரது தலை முடியை வெட்டி மொட்டை அடித்துள்ளனர். பின்னர் அச்சிதாவை பெற்றோர் விரட்டி அடித்துள்ளனர். இது குறித்த அச்சிதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது பெற்றோர், தாய்மாமன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.