கிணற்றில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள நாகநதி கிராமத்தில் கூலி தொழிலாளியான திருமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமலை வீட்டின் அருகே அமைந்துள்ள கிணற்றில் தண்ணீர் இறைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென திருமலை நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி திருமலையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.