Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… கியூபாவில் ஏற்பட்ட மிகப்பெரிய தட்டுப்பாடு…. பொதுமக்கள் கடும் அவதி…!!!!

நாடு முழுவதும் எரிபொருள் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால், கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கியூபா நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு ஏற்கனவே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு எரிபொருளுக்கான தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கியூபாவின் தலைநகர் ஹவானாவில், குறைந்த அளவு எரிபொருளே மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் அம்மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து எரிபொருள்  குறைந்த அளவே  விநியோகிக்கப்பட்டாலும், அதனை வாங்குவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து கியூபா நாட்டில் எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது, 62% எரிபொருள்கள் மூலம் லாரிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாடு முழுவதும் எரிபொருள் விநியோக சங்கிலியானது பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |