Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே!…. குடிக்க கூட தண்ணி இல்ல…. திண்டாடும் மக்கள்….. பெரும் சோகம்….!!!!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நெருப்பாண்டகுப்பம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் கட்டப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஆழ்துளை கிணறுகளும் 7 இடங்களில் உள்ளன. இருப்பினும் இந்த கிராம மக்கள் ஆழ்துளை கிணறுகள் பழுதாகி இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே நெருப்பாண்டகுப்பம் கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக அங்குள்ள மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் நெருப்பாண்டகுப்பம் கிராம மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தேவையான குடிநீர் மின் பம்பு மூலம் வழங்க உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |