போலி சாமியார்களின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனிடையில் மக்கள் போலி சாமியார்களின் வலையில் சித்தி தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். அத்துடன் போலி சாமியார்களின் வார்த்தைகளை நம்பி அவர்கள் சொல்வதை மக்கள் செய்து பின் விளைவுகளை சந்திக்கின்றனர். தற்போது போலி சாமியார் ஒருவர் சரக்கடிக்கும் புகைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பெரும்பாலான சாமியார்கள் மற்றும் யாசகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு மத்தியில் உள்ள சில போலி சாமியார்களால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த அடிப்படையில் கிரிவலப் பாதையில் போலி சாமியார் ஒருவர் சாவகாசமாக உட்கார்ந்து சரக்கடிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இது போன்ற போலி சாமியார்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.