சின்ஜியாங்கில் வீசிய கடுமையான மணல் புயலால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
சீன நாட்டில் ஷாகும் சின்ஜியாங் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடுமையாக வீசிய மணல் புயலால் அப்பகுதியே புழுதி காடாக காட்சியளிக்கிறது. இந்த மணல் புயலால் Wuqia county பகுதியில் சாலைகளில் சென்ற மக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து இந்த மணல் புயலால் ஏராளமான வாகனங்கள் சிக்கி தவித்து வந்த நிலையில் அங்கே வந்த போலீசார் அந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். மேலும் இந்த மணல் புயலால் அப்பகுதி முழுவதும் வெள்ளை நிறமாக பனி சூழ்ந்தது போல் காணப்பட்டது.