Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே….! சக வீரர்கள் மீது துப்பாக்கி சூடு…. காரணம் என்ன?…. பெரும் அதிர்ச்சி….!!!

பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காசா பகுதியில் 144 வது பி.எஸ்.எப். பட்டாலியன் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை சடேப்பா என்ற பி.எஸ்.எப் வீரர் முகாம்களிலுள்ள வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இவர் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்து உள்ளார். மேலும் இந்த தாக்குதல் நடத்திய சடேப்பாவும் உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில் அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாரா? இல்லை மற்றவர்கள் அவரை தாக்கியதால் உயிரிழந்தார்? என்பது குறித்து தகவல் வெளிவரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக  பி.எஸ்.எப். அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து பி.எஸ்.எப் வீரர்களுக்குள் ஏற்பட்ட தகராறால் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததா  அல்லது பணி அழுத்தத்தால் நடந்ததா என்ற கண்ணோட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |