Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே….! சாப்பாடு கொடுத்து கட்டாய மதமாற்றம்…..? உ.பியில் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகரில் உள்ள மங்காதபுரம் என்ற காலனியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் முன்னதாக கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது இங்கு வாழும் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை கிறிஸ்தவ அமைப்பினை சேர்ந்த சிலர் கொடுத்துள்ளார்கள். இதற்கு பதிலாக அவர்கள் கிறிஸ்துவ ஆலயத்திற்கு அந்த மக்களை வர வேண்டும் என்றும், மதமாற வேண்டும் என்றும் அவர்களை கட்டாயப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில தினங்களுக்கு முன்பாக அவர்கள் அந்த காலனிக்கு வந்து அங்கு இருப்பவர்களிடம் வீடுகளுக்குள் புகுந்து இந்து கடவுள் படங்களை வெளியே எடுத்து வீசி அவமதித்துதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |