Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!….. சிகரெட் லைட்டரை வைத்து வாலிபரை கொளுத்திய கும்பல்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!!!

பேருந்தில் சென்ற ஒரு நபர் மீது தீ வைத்து கொளுத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் மாகாணத்தில் அமைந்துள்ள winterthur நகரில் ஒரு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது பேருந்தில் இருந்த ஒரு வாலிபருக்கு, ஒரு கும்பலுக்கும்  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தகராறு முற்றி  கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது திடீரென சிகரெட் லைட்டரில் பயன்படுத்தப்படும் எரிபொருளை அந்த வாலிபர் மீது ஊற்றி  அந்த கும்பல் தீ வைத்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள்  அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் காயமடைந்த அந்த வாலிபரை   அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த கும்பலில் 18 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |