வாலிபருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி கிராமத்தில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 3 வயது சிறுமிக்கு 2020-ஆம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜமாணிக்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ராஜமாணிக்கத்திற்கு 3 ஆண்டு சிறை மற்றும் 35 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் ராஜமாணிக்கத்தை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளனர்.