ஸ்காட்லாந்தில் உள்ள Uddingston என்ற நகரில் Eamonn Goodbrand (33) என்ற நபருக்கும், Claire (26) என்ற பெண்ணுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதால் Claire, தன்னுடைய தாய் Cherry-Ann Lindsay-ன் முகத்தில் குத்தியதோடு, தலை முடியை பிடித்து இழுத்திருக்கிறார். மேலும் அவருடைய கழுத்தை பிடித்து நெரித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கீழே விழுந்த தனது தாயை Claire ஷூ காலால் மிதித்திருக்கிறார்.
மணமகன் Eamonn, அவருடைய சகோதரர் Kieran, மாப்பிள்ளை தோழன் ஆகியோர் மணமகளுக்கு ஆதரவாக சண்டையில் இறங்கியுள்ளனர். மணமகன் Eamonn ஒரு குத்துச்சண்டை வீரர் வேறு. ஆகவே, திருமண வீட்டில் கலவரமானதால் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து விசாரணைக்குப் பிறகு மணமகன் Eamonn, மணமகள் Claire, Kieran மூவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனால் மணமக்கள் தங்களுடைய முதலிரவை தனித்தனி அறைகளில் சிறையில் செலவிட நேர்ந்தது.