Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. சீனாவில் மறுபடியுமா?…. அதிர்ச்சி ரிப்போர்ட்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் சீனாவில் புதிதாக 59 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் 37 பேர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளதவர்கள் என்பதும், 22 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் மூலம் சீனாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,934-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இதுவரை 4 ஆயிரத்து 636 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |