கடந்த 2019-ஆம் ஆண்டில் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. ஆனால் சீனாவில் மட்டும் கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு புதிதாக 87 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 55 பேர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளாதவர்கள் என்றும், 32 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.