Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!…. சுக்குநூறாக நொறுங்கிய கார்…. பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பச்சாபாளையம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்களான ஹரிகிருஷ்ணன் (17), தினேஷ் (17), தமிழ்வாணன் (16), ஸ்ரீ (15) , கோபி சங்கர் (17), லெனின் ராஜ் (17) ஆகிய 6 பேரும் தமிழ்வாணனின் உறவினருக்கு சொந்தமான இண்டிகா காரில் மங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பின்னர் அம்மாபாளையம் பகுதியை கடக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் வலது புறம் நின்றுகொண்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதி அப்பளம் போல் நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த தமிழ்வாணன் (16) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல் உடன் இருந்த 5 பேர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உடனே அவர்களை மீட்ட காவல்துறையினர் 5 பேரையும் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களில் மேலும் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |