Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… செக்ஸ் வீடியோ வெளியிட்ட சுகாதார அமைச்சகம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!!

கொரோனா தரவுகளை வெளியிடுவதற்கு பதிலாக ‘செக்ஸ்’ வீடியோவை கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டதால் கனடாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. கனடா நாட்டின் கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் தினசரி கொரோனா பாதிப்பு விபரங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட கொரோனா தரவு விபரங்களை பகிர்ந்துள்ளது. அப்போது கொரோனா டேட்டாவுக்குப் பதிலாக ஆபாச வீடியோ உள்ளபக்கத்தை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோ லிங்கை கிளிக் செய்தவுடன் ஆபாச வீடியோ ஓப்பன் ஆனது. இந்த வீடியோ பதிவை பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கியூபெக் சுகாதார அமைச்சகத்தின் டுவிட்டர் கணக்கை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றார்கள். அவர்களில் சிலர் சுகாதார அமைச்சகத்தை கடுமையாக சாடியுள்ளனர். இன்னும் சிலர் ஆபாச பதிவு வீடியோவை பலருக்கும் பகிர்ந்திருக்கின்றனர். அதனை தொடர்ந்து உஷாரான சுகாதார அமைச்சகம், அரை மணி நேரத்துக்குப் பிறகுதான் தனது தவறை உணர்ந்துள்ளது.

அதன் பின்னர் அந்த வீடியோ பதிவை நீக்கியது. இதற்காக கனடா அரசாங்கத்திடம் கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் மன்னிப்பு கேட்டிருக்கிறது. மேலும் சுகாதார அமைச்சகத்தின் சமூக ஊடக கணக்குகளை கையாளும் ஊழியர்களில் சிலர் ஆபாச வீடியோ உள்ளடக்கத்தை பார்ப்பதால், அவர்கள் இதுபோன்ற செயல்களை செய்திருக்க வாய்ப்பிருப்பதாக  கூறப்படுகிறது. இந்நிலையில் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட பகிரங்க மன்னிப்பு கடிதத்தில், ‘எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலையில் பொருத்தமற்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்கிறோம். தவறு நடந்ததற்கான காரணம் பற்றி  விசாரித்து வருகிறோம்’ என்று கூறியுள்ளது. இருந்தும் அமைச்சகத்தின் செக்ஸ் வீடியோ உள்ளடக்கம் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது. அதனை பலரும் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்தாகும்.

Categories

Tech |