Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே….! செல்போனில் இருந்த பல ஆபாச வீடியோக்கள்…. காதல் கணவரை பிடித்து கொடுத்த மனைவி…!!

பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சேகர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அதே குடியிருப்பில் வசித்து வரும் ஒரு இளம்பெண் குளிக்கும் போது சேகர் அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை பார்த்த அந்த இளம்பெண் சேகரின் மனைவியிடம் கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் சேகரின் மனைவி தனது கணவரின் செல்போனை எடுத்து பார்த்த போது, தனது தங்கை உடை மாற்றும் வீடியோ உள்பட அக்கம்பக்கத்தில் வசிக்கும் பெண்களின் பல ஆபாச வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சேகரின் மனைவி திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சேகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |