டெல்லியை சேர்ந்த ஜஸ்விந்தர் சிங் (26) என்னும் இளைஞர் வசித்து வருகிறார். அமெரிக்க சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட இவர் எப்படியாவது அமெரிக்கவாசி ஆகிவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் தன்னுடன் பிறந்த இரட்டை சகோதரர்கள் உயிரிழந்துவிட்டனர். அதனால் நான் அவர்களின் இறுதி சடங்கிற்கு செல்ல வேண்டும் என விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். மேலும் இதற்காக போலி ஆவணங்களை தயார் செய்து இருக்கிறார்.
இவர் போலி ஆவணங்களை கொண்டு விசாவிற்கு விண்ணப்பித்ததை அமெரிக்க தூதரக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஜஸ்விந்தர் சிங்கை பிடித்து டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் ஜஸ்விந்தர் சிங்கை கைது செய்துள்ளனர். மேலும் அமெரிக்காவில் இருந்து போலியாவணங்கள் தயாரிக்க உதவியவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.