Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… ஜன்னல் வழியாக குதித்து ரஷ்ய எண்ணெய் நிறுவன அதிபர் தற்கொலை…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

ரஷ்யாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான லூகோயிலின் தலைவர் ரவில் மகனோவ்(67) என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் மருத்துவமனையின் ஆறாவது மாடியில் உள்ள ஜன்னல் வழியாக குதித்து உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். மேலும் ஜன்னலில் இருந்து தவறி விழுந்து இருந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். ரவில் மகனோவின் மரணம் அவரது நிறுவனத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இவரது மரண வழக்கை மாஸ்கோ காவல்துறை மாநில விசாரணை ஆணையத்திடம் ஒப்படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Categories

Tech |