பிரேசில் நாட்டில் உள்ள ஃபர்னாஸ் என்ற ஏரிக்கு வார இறுதிநாளை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் படகுகளில் சென்றுள்ளனர். இந்நிலையில் 3 படகுகளில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் மீது எதிர்பாராதவிதமாக ராட்சத பாறை இடிந்து விழுந்துள்ளது. இந்த கோர சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 32 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், 20 பேர் மாயமானதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.