Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! ஜி.பி முத்துவின் மகன் பரிதாபமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சி தகவல்…..!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். இதில் வலிமையான போட்டியாளர்களின் முக்கியமான ஒருவர் ஜி.பி.முத்து இவர் சில நாட்களாக வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார். எல்லாரும் சமாதானம் படுத்தினாலும் அவர் கேட்கவில்லை.

இதனால் அவருடைய விருப்பப்படி நேற்று ஒளிபரப்பான எபிசோடில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் மேல் ரசிகர்கள் வைத்திருந்த நம்பிக்கை உடைந்து போயிருந்தாலும், அவர் தன்னுடைய மகனை பார்க்க தான் வீட்டில் இருந்து வெளியேறினார் என்று தெரிகிறது. இந்நிலையில் ஜி.பி. முத்துவின் மகன் விஷ்ணு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்ட ஜி.பி.முத்துவின் மகன் விஷ்ணுவின் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இதனை பார்த்து ரசிகர்கள், விரைவில் விஷ்ணு குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டி வருகிறார்கள்.

Categories

Tech |