ராஜஸ்தான் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள 25 வயதிற்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் அவரது குடும்ப நிகழ்ச்சிகளில் பூஜை செய்யும் பூசாரி சஞ்சய் சர்மா என்பவர் வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து இருக்கின்றார். இந்த நிலையில் இதே போல் கடந்த மாதம் பலமுறை அந்த பெண்ணை சஞ்சய் சர்மா உள்ளிட்ட சில பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இதனை அடுத்து உச்சகட்டமாக அந்த பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றனர். இதை வெளியில் சொன்னாலோ அல்லது போலீசில் புகார் அளித்தாலோ அந்த பெண்ணின் குழந்தை மற்றும் கணவரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனை அடுத்து அந்த பெண் வீடு திரும்பாத நிலையில் அவர் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காணாமல் போனதாக வழக்கு பதியப்பட்டு காவல்துறையினர் தேடி வந்தனர். வழக்கு பதியப்பட்டதை தெரிந்த சஞ்சய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி அன்று அந்த பெண்ணை காவல் நிலைய வாசலில் இறக்கிவிட்டு சென்றுள்ளார் இதன் அடிப்படையில் அக்டோபர் 7ஆம் தேதி வழக்கு பதியப்பட்டு காவல்துறையினர் குற்றவாளியை தேடி வருகின்றனர்.