ஏதென்ஸின் மலைபாங்கான புகர்ப் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 500 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐரோப்பாவில் பல இடங்களில் பரவி வரும் காட்டுத்தீ கணிசமான அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸின் மலைப்பாங்கான புகர் பகுதி காடுகளில் இரண்டு நாளாக காட்டு தீ வேகமாக பரவி வருகின்றது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, ” காட்டுத்தீ அபாயம் காரணமாக தலைநகரில் உள்ள நூற்றுக்கணக்கானவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சுவாசக் கோளாறு மற்றும் தீக்காயங்களுடன் ரெண்டு பேரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பா முழுவதும் பல்வேறு இடங்களில் காட்டுத்தீ பரவி வந்தாலும். பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பேச்சுக்கள் ஆகிய நாடுகளில் தீக்கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஏதென்ஸ் புகர் பகுதியில் தொடர்ந்து வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.