Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… திடீரென பற்றி எரிந்த வீடு… இளம் தொழிலதிபர் உடல் கருகி பலி… பெரும் சோகம்…!!!!!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் லாங் ஐஸ்லாந்து எனும் பகுதியில் வசித்து வருபவர் தான்யா பதிஜா (32). இவர் அந்த பகுதியில் டோனட்ஸ் இனிப்பு கடை நடத்தி வரும் இளம் தொழில் அதிபர். இவரது தந்தை கோபிந்த் பதிஜா. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அங்கு வசித்து வருகின்றார். இந்நிலையில் தான்யா பதிஜாவின் வீடும் அவரது தந்தையின் வீடும் ஐஸ்லாந்து பகுதியில் அருகருகே அமைந்துள்ளது. கடந்த 14-ஆம் தேதி இரவு தான்யா பதிஜா  வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருடன் அவர் வளர்த்து வந்த  செல்லப்பிராணி நாயும் இருந்துள்ளது.

இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஆனால் தீ பிடித்து எரிந்தது தெரியாமல் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த தன்யா பதிஜா மற்றும் அவரது செல்லப்பிராணி நாய் தீயில் கருகி பரிதாபமாக உயர்ந்துள்ளனர். இதனையடுத்து அதிகாலை தன்யா பதிஜாவின் தந்தை நடைப்பயிற்சிக்கு வீட்டிலிருந்து வெளியே வந்த போது அவரது மகள் வீட்டில் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்து மீட்பு குழுவினர் வந்து தீயை அணைத்துள்ளனர். தீயில் சிக்கிய தன்யா பதிஜா உயிரிழந்துள்ளார். மேலும் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.

Categories

Tech |