திடீரென பனிப்புயல் விசியதால் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா நாட்டில் பென்சில்வேனியா என்ற பகுதியில் நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் நேற்று வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விசிய பனி புயலால் சாலையில் சென்ற கார்கள், லாரிகள் மற்றும் டிராக்டர்கள் உள்ளிட்ட 50 முதல் 60 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டது. இதில் சில வாகனங்கள் மட்டும் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில், ஷுயில்கில் கவுன்டி பகுதியில் நடைபெறும் இரண்டாவது மிக பெரிய வாகன மோதல் இதுவாகும்.
இதனை தொடர்ந்து இந்த பகுதியில் அடிக்கடி பெரிய அளவில் பனி புயல் வீசுவதால் தெளிவற்ற வானிலை காணப்படும். எனவே வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டுமென தேசிய வானிலை சேவை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.