Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. திடீர்னு என்ன ஆச்சு?…. ராஜினாமா லெட்டரை நீட்டிய இந்தியர்?…. வெள்ளை மாளிகையில் சலசலப்பு….!!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியர்களுக்கு வெள்ளை மாளிகையில் பல முக்கியமான பதவிகளை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளார். அதில் தலைமை இராணுவ அதிகாரி பணி வெள்ளை மாளிகையில் மிக முக்கியமானது ஆகும். ஏனென்றால் இந்த தலைமை ராணுவ அதிகாரி வெளிநாட்டு பயணம், அதிபரின் உள்ளூர் சாலை போக்குவரத்து, அதிபர் பயணிக்கும் ஏர்போர்ஸ் ஒன் விமானம், வெள்ளை மாளிகையின் நடவடிக்கைகள், உணவு சேவை, மருத்துவம், தகவல் பாதுகாப்பு என அதிபர் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கும் முழு பொறுப்பு இவரே ஆவார்.

அந்த வகையில் இந்த தலைமை இராணுவ அதிகாரி பணியில் கேரளாவை பூர்வீகமாக கொண்ட மஜு வர்கீஸ் என்பவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில் தனிப்பட்ட சில காரணங்களுக்காக மஜு வர்கீஸ் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் வர்கீஸ் பைடனின் வெள்ளை மாளிகை பயணம், 2020 அதிபர் தேர்தல் பிரச்சாரம், தலைமை செயல் அதிகாரி, மூத்த ஆலோசகர் என பல பொறுப்புகளில் நீண்ட காலமாக பயணித்து வந்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அதிபர் ஜோ பைடனின் நம்பிக்கைக்கு உரியவராக வர்கீஸ் இருந்துள்ளார். எனவே இவர் திடீரென பதவி விலகுவதாக அறிவித்துள்ளதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |