நடிகை எமிஜாக்சன் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் தற்போது அவர் எதிர்பார்த்த படி பட வாய்ப்புகள் அமையாததால் தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டார். இவர்களுடன் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். இவர் இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை நிச்சயம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இவர் தன்னுடைய காதலனைப் பிரிந்து விட்டதாக தற்போது பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. 2019ல் இவருக்கு ஜார்ஜ் மூலமாக ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்ய இருந்தபோது திடீரென்று பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் எமிஜாக்சன் சமூக வலைதளங்களில் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் நீக்கியுள்ளார்.