பிரபல நாட்டின் அதிகாரிகள் மீது அமெரிக்கா புதிய தடையை விதித்துள்ளது.
பிரபல நாடான வடகொரியா தனது எதிரி நாடுகளை அழிப்பதற்காக தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் அதிபரான கிம் ஜான் அன் சர்வதிகார ஆட்சி நடத்தி வருகிறார்.
மேலும் இவர் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறார். இதனால் கொரிய தீபகற்பம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் ஏவுகணை திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் 3 வடகொரிய அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்துள்ளது.