மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள கானா நாட்டைச் சேர்ந்த கோபி அட்டா என்னும் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தூங்கிக் கொண்டிருந்த போது இவருக்கு ஆட்டை வெட்டுவது போன்ற கனவு வந்திருக்கிறது. அப்போது அவர் கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு தனது அந்தரங்க உறுப்பின் ஒரு பாகத்தை தவறுதலாக வெட்டியுள்ளார். இதனை அடுத்து வலியால் கனவு கலைந்த உடனே தனக்கு நேர்ந்து அவலத்தை நினைத்து பதறிப் போய்விட்டார்.
இந்த சூழலில் ரத்தத்துடன் துடித்துக் கொண்டிருந்த கோபியை அவரது உறவினர்கள் உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்த்திருக்கின்றார். நல்ல வேலையாக அவரது உயிருக்கு எதுவும் ஆபத்து ஏற்படாமல் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது ஓய்வில் உள்ள அவர் தன் கையில் எப்படி கத்தி வந்தது என்றும் நான் எப்படி இதை செய்தேன் எனவும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் இவருக்கு மேற்படி ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை முடிந்து சுமார் ஒன்றரை மாதம் முறையாக ஓய்வெடுத்தால் இயல்பாக செயல்பட தொடங்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.