குஜராத் மாநிலம், மோர்ஹி பகுதியில் மச்சு ஆறு ஓடிக் கொண்டிக்கிறது. இந்த ஆற்றை கடக்க அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்காணக்கனோர் பொதுமக்கள் அங்குள்ள கேபிள் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று மாலையும் நூற்றுக்கணக்கானோர் பாலத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 இக்கும் மேல் கடந்தது. 177 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குஜராத் பாலம் சரிந்து ஆற்றில் விழுந்த விபத்தில் தன்னுடைய உறவினர்கள் 12 பேரும் இறந்திருப்பதாக ராஜ்கோட் நாடாளுமன்ற உறுப்பினர் மோகன்பாய் கல்யாண்ஜி தெரிவித்துள்ளார். மோகன்பாயின் சகோதரியின் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் உட்பட மொத்தம் 12 பேர் விபத்தில் இறந்திருக்கிறார்கள். இதுவரை இறந்த 132 பேரில் அதிகம்பேர் குழந்தைகள் என்பதுதான் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.