கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மானி பரம்பரை சேர்ந்த தம்பதிகள் எபி மற்றும் செல்கா. இவர்களுக்கு 4 மாத பெண் குழந்தை ஒன்று இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று காளையின் செல்கா குழந்தைய எழுப்பிய போது குழந்தை எவ்வித அசையும் இன்றி கிடந்துள்ளது. இதனால் பதறிப்போன அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் மரணத்திற்கு தாய்ப்பால் தொண்டை குழியில் சிக்கியிருந்ததை காரணம் என்று தெரிவித்துள்ளனர். பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.