நடிகை நித்யா மேனன் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் விதமாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை போட்டார். அதை பார்த்தவர்களோ திருமணமாகாத நித்தியா மேனன் கர்ப்பமா என்று பேச தொடங்கினர். இவர் மட்டுமல்ல மலையாள நடிகையான பார்வதி, பத்மபிரியா, அர்ச்சனா பத்மினி உள்ளிட்ட பலரும் நித்தியா மேனன் வெளியத்த வெளியிட்ட அதே கர்ப்பம் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். இந்நிலையில் நித்யா மேனனின் கர்ப்பத்திற்கு காரணம் இயக்குனர் அஞ்சலி மேனன் என்பது தெரிய வந்திருக்கிறது.
அஞ்சலி மேனன் இயக்கத்தில் நித்யா மேனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் wonder women. கர்ப்பமாக இருக்கும் சில பெண்களை மையப்படுத்திய படமாகும். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தான் படப்பிடிப்பு நடந்தது. அந்த படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்யவே இப்படி கர்ப்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.